குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் ! தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிப்பு
நிலத்தடி நீரை எடுக்க உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என்று லாரி உரிமையாளர் சங்க தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன் பேச்சுவார்த்தை நடத்த நகராட்சி நிர்வாகம் உறுதியளித்ததால் வாபஸ் பெறப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.