மேட்டூர் அணைக்கு நீர் வரத்து உயர்வு..! தண்ணீர் பிரச்சனை வராது -அதிகாரிகள்..!
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்ந்து மழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை இந்த ஆண்டு நான்காவது முறையாக நிரம்பி உள்ளது. தற்போது அணைக்கு 6 ஆயிரத்து 43 கன அடி நீர்வரத்தை வந்து கொண்டு இருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கிழக்கு , மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 5 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு குறைவாக உள்ளததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் இந்த வருடம் மேட்டூர் அணையை நம்பி உள்ள மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை வராது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.