தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது-துரைமுருகன்

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.அவர் கூறுகையில், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது . ரயில்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்ட வரலாறும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.