காவேரி விவகாரம் ; மத்திய அமைச்சர் உடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு.!
மத்திய அமைச்சர் உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
காவேரில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மதத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், கடந்த மாதம் போதிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறக்காதது குறித்தும், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லி புறப்பட்டார்.
இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உடன் அமைச்சர் துரைமுருகன் நேரில் செந்தித்து மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை முடிந்ததும் அமைச்சர் துரைமுருகன் – மத்திய அமைச்சர் சந்திப்பு குறித்து முழு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.