மேட்டூர் அணையை நேரில் சென்று ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்..!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மேட்டூர் அணையை ஆய்வு செய்துள்ளார்.
தமிழகத்தின் மிக முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றான மேட்டூர் அணையானது முழு கொள்ளளவை எட்டிள்ளது. இதனையடுத்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மேட்டூர் அணையை ஆய்வு செய்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து மற்றும் எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்து வருகிறார். இன்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது, 40 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணை பாதுகாப்பபு நிலவரங்களை ஆய்வு செய்த பின், ஒக்கேனக்கல்லில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.