கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு!
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள மிகப்பெரிய நீர் தேக்கமாக விளங்கும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார். அதுபோல மேற்கு கால்வாய் மூலம் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலங்கள் பயன் அடைவதற்காக தண்ணீர் திறக்கப்படும் நிகழ்ச்சி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடைபெறும்.
அவை தற்பொழுது மின்மயமாக்கப்பட்ட உள்ளதால், 17 நாட்கள் தாமதம் ஆகியுள்ள நிலையில் இன்று மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 9.45 மணி அளவில் அமைச்சர் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி கருப்பன், சரோஜா, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர் செம்மலை ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக நீர் திறந்து விட்டுள்ளனர்.