புழல் ஏரியில் 3 மணிக்கு தண்ணீர் திறப்பு -உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தல்
புழல் ஏரியில் 3 மணிக்கு தண்ணீர் திறக்க உள்ளதால்,உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல,தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.புழல் ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21. 20 அடியாகும். இன்று (டிசம்பர் 4 -ஆம் தேதி ) காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 19.70 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2373 கன அடியாக உள்ளதால் இன்று பிற்பகல் 3 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி வெளியேற்றப்பட உள்ளதால், நாரவரி குப்பம், வடகரை’ கிராண்ட் லைன்’ புழல், வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம்பகுதியில் கால்வாய் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.