3 நாட்களாக நடைபெற்ற தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்…!வாபஸ் பெற்ற தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் …!

Published by
Venu

தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் நிஜலிங்கம், 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து முடிவு செய்தனர்.
 
தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக், கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.அதேபோல் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே வணிக வளாகம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. பராமரிப்புப் பணிக்காக இன்று மூடப்படுவதாக ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தால் டீ கடை, ஹோட்டல்கள் என அனைத்து வணிக நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிப்படைந்து வருவதாக வணிகர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்.
இதனால் நேற்று  தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டார்.சென்னையில்  கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது.
முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பின் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,வேலைநிறுத்தம் தொடர்பாக தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும்.  இன்றைக்குள் சுமூக தீர்வு எட்டப்படும்.தண்ணீர் லாரி உரிமையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.கேன் குடிநீர் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.பேச்சுவார்த்தையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Related image
இதன் பின்னர் நேற்று  மாலை  பேச்சு வார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்று  அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் அறிவிப்பு வெளியிட்டார்.மேலும் பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை.எனவே தண்ணீர்  லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்தார்.

இதன் பின்னர் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து தண்ணீர்  லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் நிஜலிங்கம், 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

அதேபோல்  தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதனையடுத்து கேன் குடிநீர் நிறுவன உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago