தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் …!மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை…!அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

Published by
Venu

வேலைநிறுத்தம் தொடர்பாக தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து முடிவு செய்தனர்.
Image result for தண்ணீர் லாரி வேலை நிறுத்தம்
 
தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக், கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.அதேபோல் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே வணிக வளாகம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. பராமரிப்புப் பணிக்காக இன்று மூடப்படுவதாக ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தால் டீ கடை, ஹோட்டல்கள் என அனைத்து வணிக நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிப்படைந்து வருவதாக வணிகர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்.

இதனால்  தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிஆலோசனையில் ஈடுபட்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டார்.சென்னையில்  கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது.

முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பின் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,வேலைநிறுத்தம் தொடர்பாக தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும்.  இன்றைக்குள் சுமூக தீர்வு எட்டப்படும்.தண்ணீர் லாரி உரிமையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.கேன் குடிநீர் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.பேச்சுவார்த்தையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

இனிமே ஹீரோவாதான் நடிப்பேன்! ஆதங்கத்துடன் முடிவை கூறிய கலையரசன்!

சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…

9 minutes ago

சவுதி அரேபியாவை திருப்பி போட்ட பேய் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா.!

மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…

46 minutes ago

திமுக கொடியில் இருக்கும் கருப்பை நீக்க முடியுமா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…

51 minutes ago

நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 30க்கும் மேற்பட்டோர் பலி!

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…

1 hour ago

மறைந்த தலைவர்களுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்… சட்டசபை ஒத்திவைப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…

2 hours ago

மாடுபிடி வீரர்கள் கவனத்திற்கு! விண்ணப்பம் செய்ய இன்று தான் கடைசி நாள்!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…

3 hours ago