#BREAKING: நீர்நிலைகள் நுரையீரலை போன்றது- உயர்நீதிமன்றம்..!
நீர்நிலைகள் வாழ்வாதாரத்திற்கு நுரையீரலை போன்றது என்பதால் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் நீதிபதிகள் கருத்து.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 நீர்நிலைகள் காணவில்லை என பொன்தங்கவேல் என்பவர் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நீர்நிலைகள் வாழ்வாதாரத்திற்கு நுரையீரலை போன்றது என்பதால் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் இருந்து காக்க வேண்டியது தமிழக அரசு மாநகராட்சி அதிகாரிகளின் கடமை. சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தனர்.