நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்க தவறினால் அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியும் என்பதால் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் நீர் நிலைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை.
ஆக்கிரமிப்பு மீண்டும் இருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், தலைமை செயலரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். தமிழகம் முழுவதும் நீநிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்குகளில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…