தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் காமராஜ்
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்க மாட்டோம். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பது குறித்து, தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.