திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு – முதல்வர் பழனிசாமி

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரிநாயக்கன் ஏரிப்பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட கோரி, உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் பூசாரிநாயக்கன் ஏரிப் பாசன விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
இந்நிலையில், வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம், பூசாரிநாயக்கன் ஏரிப் பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து 39.87 மி.கன அடிக்கு மிகாமல் 16.9.2020 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்
இதனால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை – 14.09.2020 pic.twitter.com/NeTCYObrZJ
— DIPR TN (@TNGOVDIPR) September 15, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025
12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
March 3, 2025
2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!
March 3, 2025