பவானிசாகர் அணையில் பாசனத்துக்காக நாளை முதல் நீர் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு!

நாளை முதல் 15 ஆம் தேதி வரை பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க தமிழக முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டதில் உள்ள பவானிசாகர் அணையை நாளை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பாசனத்திற்கு திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் 241.62 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுவதால், கோபி, பவானி, அந்தியூரில் உள்ள 24,505 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும், 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்காக நீர் விநியோகம் செய்யபடும் எனவும், 3 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்து நீர் திறக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025