தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை தான் உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்துவரும் பயிற்சி மருத்துவர்கள் பலர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். அப்படி சிகிச்சையளித்து வந்த இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களுக்காக இயங்கி வந்த கேன்டீன் முன் அறிவிப்புமின்றி மூடப்பட்டது.இதனால் விடுதியில் தங்கியுள்ள மருத்துவர்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர்.
இதுதொடர்பாக மாணவர்கள் மருத்துவமனை டீனுக்கு மனு கொடுத்தனர்.மேலும் ட்விட்டரில் அமைச்சர் சுகாதாரத்துறைச் செயலாளருக்கும் டேக் செய்து கோரிக்கை வைத்தனர்.இதற்கு பதிலளித்த பீலா ராஜேஷ்,கோவை கலெக்டருடன் பேசிவிட்டேன். அங்கு உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது’ என்று கூறினார்.
இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில் , ஊரடங்கு உத்தரவால் நாங்கள் வெளியில் எங்கும் போக முடியவில்லை. கேன்டீனில் இருந்த உணவைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.
இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா பாதிக்கப்பட்டதால் கேன்டீனைத் திடீரென்று மூடிவிட்டனர். இங்கு 600 பேர் இருக்கிறோம். எங்களுக்குத் தரமான உணவு, தண்ணீர் கொடுங்கள் என டீன் அறை முன்பு போராட்டம் நடத்தினோம். மருத்துவமனை நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளை கேட்கவில்லை.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் கூறுகையில் ,கொரோனா பாதித்த மருத்துவர்கள் அங்கு சென்றதால் கேன்டீனைப் பூட்டிவிட்டனர். மருத்துவமனை நிர்வாகம்தான் உணவுக்கான மாற்று ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் என்னிடம் பேசினர். மருத்துவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…