தண்ணீர், உணவு இல்லை.! மருத்துவர்கள் போராட்டம்.!

Default Image

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை தான் உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.மருத்துவமனை மற்றும்  சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு  வருகிறது.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்துவரும் பயிற்சி மருத்துவர்கள் பலர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். அப்படி சிகிச்சையளித்து வந்த இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களுக்காக இயங்கி வந்த கேன்டீன் முன் அறிவிப்புமின்றி மூடப்பட்டது.இதனால் விடுதியில் தங்கியுள்ள மருத்துவர்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர்.
இதுதொடர்பாக மாணவர்கள் மருத்துவமனை டீனுக்கு மனு கொடுத்தனர்.மேலும் ட்விட்டரில் அமைச்சர் சுகாதாரத்துறைச் செயலாளருக்கும் டேக் செய்து கோரிக்கை வைத்தனர்.இதற்கு பதிலளித்த பீலா ராஜேஷ்,கோவை கலெக்டருடன் பேசிவிட்டேன். அங்கு உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது’ என்று கூறினார்.
இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில் , ஊரடங்கு உத்தரவால் நாங்கள் வெளியில் எங்கும் போக முடியவில்லை. கேன்டீனில் இருந்த உணவைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.
இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா பாதிக்கப்பட்டதால் கேன்டீனைத் திடீரென்று மூடிவிட்டனர். இங்கு 600 பேர் இருக்கிறோம். எங்களுக்குத் தரமான உணவு, தண்ணீர் கொடுங்கள் என டீன் அறை முன்பு  போராட்டம் நடத்தினோம். மருத்துவமனை நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளை கேட்கவில்லை.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் கூறுகையில் ,கொரோனா பாதித்த மருத்துவர்கள் அங்கு சென்றதால் கேன்டீனைப் பூட்டிவிட்டனர். மருத்துவமனை நிர்வாகம்தான் உணவுக்கான மாற்று ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் என்னிடம் பேசினர். மருத்துவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க  நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்