தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! தண்ணீர் பற்றாக்குறையால் ஐ.டி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வற்றி போனதாலும், பருவமழை பொய்த்ததாலும் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் தான் மிக பெரிய அளவில் தேனீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது..
இந்நிலையில், சென்னையின் ஓ.எம்.ஆர் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை அவர்களுக்கு தேவையான தண்ணீரை கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பல நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.