ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு கடந்த அதிமுக ஆட்சி ஒரு உதாரணம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
சி.ஏ.ஜி. அறிக்கை தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியை நோக்கி வைத்துள்ளனர். அதிமுக ஆட்சியின் போது 3% மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளனர் என தெரிவித்த அமைச்சர், 2016-ஆம் அண்டு முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.
மடிக்கணினி திட்டம்:
மடிக்கணினி அதிமுக ஆட்சியில் 1.75 மாணவர்களுக்கு வழங்கவில்லை என குற்றசாட்டினார். எனவே, அதிமுக ஆட்சியில் விடுபட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 14 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்.
முறைகேடுகள்:
மேலும், 2016-2021 அதிமுக ஆட்சியில் வீடுகள் கட்டப்பட்டதில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட குறைவான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 5.09 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்:
அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர், பட்டியல் இன மக்களுக்கு வழங்க வேண்டிய 60% வீடுகளை வழங்கவில்லை. ரூ.2.18 கோடி தேவையற்ற செலவு என சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிட்டு உள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
வீண் செலவு:
தொடர்ந்த்து பேசிய அமைச்சர், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகளை, பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கியுள்ளனர். தேவையற்ற செலவுகளையே அதிமுக அரசு செய்துள்ளது என்று சிஏஜி அறிக்கை தெளிவாக காட்டியுள்ளது. அதிமுக ஆட்சியில் புத்தகப்பையில் இருந்த படத்தை மாற்ற ரூ.13 கோடி செலவாகும் என்பதால், அதை மாற்ற வேண்டாம் என்று கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி ஒரு உதாரணம் எனவும் கூறினார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…