வெறிசோடிய வாக்குச்சாவடி மையங்கள்! தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தமிழகத்தில் அனைத்து இடங்களிலுல் வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், கே.கே.புதூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால், தாங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கே.கே.புதூர் கிராமத்தில் 934 வாக்காளர்களும், இருசம்மநல்லூரில் 700 வாக்காளர்களும் இருந்த நிலையில், ஒருவர் கூட வாக்களிக்காமல், அப்பகுதி வாக்குச்சாவடிகள் வெறிசோடி காணப்படுகிறது.
அப்பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் கே.கே.புதூர் கிராமத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை எரிக்கும் ஆலையை மூடக்கோரி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.