குடிநீர், தண்ணீர் இல்லாத ஊரில் வாஷிங் மெஷினா…? எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை…! – கமலஹாசன்

Default Image

முறையான குடிநீர், தண்ணீர் வசதி இல்லாத ஊரில் வாஷிங் மெஷின் கொடுப்பதாக உறுதி அளிக்கின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். திங்கட்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த இவர். கோவை ராஜவீதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நான் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை கூறினால் அதை ஏற்க மறுக்கிறார்கள். இதனை காரணமாக கூறி மயிலாப்பூரில் தான் போட்டியிடுவேன் என அவர்களே முடிவுக்கு வந்தனர். அவற்றை பொய்யாக்கும் விதமாக தான் நான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு, உங்களில் ஒருவன் நான் என்பதை நிரூபித்துள்ளேன்.

கோவை தங்களது கோட்டை எனக்கு ஒரே ஊழல் செய்யும் பலர் கூறி வருகின்றனர். அது பொய்யென்று இந்த தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டுவோம் என்றும் இலவசங்களை மக்கள் எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில். முறையான குடிநீர், தண்ணீர் வசதி இல்லாத ஊரில் வாஷிங் மெஷின் கொடுப்பதாக உறுதி அளிக்கின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ளார். மக்களுக்கு இலவச வாசிங் மெசின் அளிப்பதாக அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்