கிருமிநாசினி, மாஸ்க் வாங்கியதில் ஊழல் நடந்ததா ..? உயர்நீதிமன்றம்..!

ஓமலூர் பஞ்சாயத்தில் ரூ.11.55 லட்சத்திற்கு மாஸ்க், கிருமிநாசினிகள் வாங்கியதில் ஊழல் நடந்ததா ..? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஓமலூர் ஊராட்சி சார்பில் கொரோனா நிவாரண நிதியிலிருந்து கிருமிநாசினி வாங்கியதில் நடந்த முறைகேடு பற்றி விசாரிக்க கோரி சிவஞானவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சித்துறை தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.