நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா? – எச்.ராஜா
நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா?
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், நேற்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
இந்த வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதார நெருக்கடி, நிதி பற்றாக்குறை மற்றும் கடன் சுமை உள்ளிட்ட பல விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை விமர்சித்து, ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா?
— H Raja (@HRajaBJP) August 10, 2021