‘உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா?’ – அரசு பேருந்திற்குள் அடைமழை! – கமலஹாசன்
உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் குடைபிடித்து குடையா? ஆளும் கட்சிக்கான கருப்பு கொடியா?
தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக அளிக்கிறது. வெளியில் பயணம் செய்யும் மக்கள், பேருந்தில் சென்றால் பாதுகாப்பாக செல்லலாம் என நினைத்து பேருந்தில் பயணம் செய்வதுண்டு. ஆனால், இன்று பேருந்திற்குள்ளும் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பதிவில், ‘புத்தம் புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைபிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் குடைபிடித்து குடையா? ஆளும் கட்சிக்கான கருப்பு கொடியா?’ என பதிவிட்டுள்ளார்.