திட்டமிடாமல் பணிகளை செய்ததால் இடித்து தள்ளப்பட்டதா? தினகரன்

Default Image

மக்களின் சந்தேகங்களுக்கு பழனிசாமி அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.336 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இதனிடையே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்தது.இதனால் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.

இதனிடையே அமைச்சர் தங்கமணி மருத்துவமனை கட்டும் பணியை ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்பொழுது அவர் கூறுகையில்,கட்டடம் இடியவில்லை, அதிகாரிகளே இடித்தனர் என்றும் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டுகளை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளின்போதே புதிதாக கட்டப்பட்ட தூண் உள்ளிட்டவை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், அதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன

ஆனால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விபத்து நடைபெறவில்லையென்றும், அதிகாரிகள்தான் அதனை இடித்து தள்ளினார்கள் என்றும் கூறியிருக்கிறார். அப்படியானால் விபத்து நடந்ததாக தகவல் வெளியானதும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவசர, அவசரமாக அங்கு சென்று பார்வையிட்டது ஏன்?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தரமற்ற பொருட்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளப்படுவதால் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்ததா? இல்லை, திட்டமிடாமல் பணிகளை செய்ததால் இடித்து தள்ளப்பட்டதா? என்ற மக்களின் சந்தேகங்களுக்கு பழனிசாமி அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும்.மக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் கட்டுமானத்தில் நிகழும் இத்தகைய தவறுகளுக்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review