நெல்லை முதன்மை கல்வி அலுவலருக்கு பிடிவாரண்ட்!- ஐகோர்ட் கிளை
திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் உத்தரவு.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஜனவரி 20ம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ் என்பர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலை பள்ளியில் 2ம் நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் என மனுதாரர் கூறியுள்ளார். நான் BT அசிஸ்டன்ட் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றிருந்தும் எனக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
2020ல் தொடர்ந்த வழக்கில் 8 வாரத்தில் எனது மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது வரை எனது பதவி உயர்வுக்கான மனுவை அதிகாரிகள் பரிசீலினை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றதாக இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தார் நீதிபதி தண்டபாணி.