அடுத்த 6 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அங்காங்கு வெள்ளநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், காற்றின் வேகம் அதிகரித்துள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…
கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…