மீனவர்களுக்கு எச்சரிக்கை – துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
அந்தமான் அருகே வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்த நிலையில், தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. மேலும் இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் பின்னர் அது வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு சிட்ராங் என பெயர் சூட்டப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.