எச்சரிக்கை.! வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்த்தால் இவ்வளவு பாதிப்பா.?
- வருகின்ற 26-ம் தேதி தமிழகத்தில் காலை 9.30 மணிக்கு நிகழவுள்ள வளைய வடிவ சூரிய கிரகணம்.
- இதை வெறும் கண்களால் பார்த்தால் பார்வை பாதிப்பு ஏற்படும் என்று சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வளைய வடிவ சூரிய கிரகணம் நிகழவுள்ளது. மேலும் இது காலை 9:30 மணிக்கு கோவை, உதகை, திருச்சி, புதுக்கோட்டை முதலிய இடங்களில் சூரிய கிரகணம் நன்கு தெரியும், என சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் செயல் இயக்குனர் செளந்தரராஜ பெருமாள், மத்திய முதுநிலை விஞ்ஞானி த.வி வெங்கடேஷ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்த்தால் பார்வை பாதிப்பு ஏற்படும் என்று சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எச்சரித்துள்ளது. மேலும் சூரிய கிரகணத்தை பார்க்க தமிழகத்தில் 11 இடங்களில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், கிரகணம் ஏற்படும் நாளில் பொதுமக்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறினார்கள்.