எச்சரிக்கை : முழுகொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி…! உபரி நீர் வெள்ள அபாய எச்சரிக்கை…!

Published by
லீனா

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியதால், ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1:30 மணிக்கு 500 கன ஆதி  திறக்கப்படவுள்ளது. 

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பியுள்ளன. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியதால், ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1:30 மணிக்கு 500 கன ஆதி  திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மாற்றம் நீர்வள ஆதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (07.11.2021) நீர் இருப்பு 21.30 அடியாகவும் கொள்ளளவு 2934 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 600 கன அடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. எரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை (Compendium Rules) வழிகாட்டுதலின்படி ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரியிலிருந்து இன்று 07.11.2021 பிற்பகல் 1.30 மணி அளவில் விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் உடனடியாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

14 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago