எச்சரிக்கை : 6 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர், கடலூர், தூத்துக்குடி, நாகை, பாம்பன் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் இது 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று, மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். பின் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு – ஆந்திரா ஒடிசா கரையை 4-ஆம் தேதி காலை நெருங்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘ஜாவத்’ என பெயரிட்டுள்ளனர்.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர், கடலூர், தூத்துக்குடி, நாகை, பாம்பன் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.