வேகமாக நிறையும் மதுராந்தகம் ஏரி; மக்களுக்கு எச்சரிக்கை.!
மதுராந்தகம் ஏரி, 22 அடியை எட்டியுள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது, அந்த வகையில் கடந்த இரு தினங்களாக நிவர் புயலால் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏறி அதன் முழு கொள்ளளவான 23 அடியை கொண்டுள்ளது. இந்நிலையில், அதன் அடியில் 22 அடியை எட்டியதால் கரையோர மக்கள் பாதுகாப்பு இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிருத்தியுள்ளனர்.
மேலும், மதுராந்தகம் ஏரி முழுமையாக நிரம்பியதால் அத்தண்ணீரை வைத்து சுற்றுவட்டாரத்தில் உள்ள 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தெற்கு வங்க கடலில் நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.