மீனவர்களுக்கு எச்சரிக்கை.. மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால், அந்த பகுதிகளில் மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதில் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மலை பெய்யும் என தெரிவித்தது.
அதுமட்டுமின்றி, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடுவதால், அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.