நேற்று காசாவில் உள்ள அல் அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். குழந்தைகள் நிறைந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் , சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமன்றி, தாக்குதலுக்கு பயந்து மருத்துவமனையில் தஞ்சமடைந்தவர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கனடா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஹமாஸ் அமைப்பு, மருத்துவமனை மீதான தாக்குதல் போர்குற்றம், இனப்படுகொலை என குற்றம்சாட்டியுள்ளது. பாலத்தீன அதிபர் முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
காசா மருத்துவமனை மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் குறித்து பா.சிதம்பரம் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், காசாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் உண்மையாக இருந்தால், அது கண்டிக்கத்தக்கது.
தற்போதைய இரத்தக்களரி மோதலைத் தூண்டிய அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலைப் போலவே இதுவும் கொடூரமானது. சண்டையை உடனடியாக நிறுத்தாவிட்டால் இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பாதிக்கப்படுவார்கள். சண்டைகளுக்கு போர் தீர்வாகாது.
இந்தியாவும் பிற நாடுகளும் சண்டையை நிறுத்தவும், பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான வழிகளை ஆராயவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…