போர் என்பதே கொடூரமானது! உலக சமுதாயம் இனியும் இதை கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது – முதல்வர்

Tamilnadu CM MK Stalin

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து உச்சகட்டத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. உலக நாடுகள் கண்டங்களை தெரிவித்து, போரை நிறுத்த இருதரப்பும் முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், ஹமாஸ் அமைப்பை ஒடுக்கப்படும் என இஸ்ரேல் தனது தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் மீது குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இந்த போரால் ஆயிரக்கணக்கான உயிரிகள் பறிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், காசாவில் உள்ள அல் – அஹிலி மருத்துவமனை மீது குண்டு வீசி தாக்குதல் கொடூரமான  நடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 ஆயிரம் பேர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியானது. இந்த குண்டுவீச்சில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது.

காசா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் தாக்குதல்… 500 பேர் உயிரிழப்பு..!

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும், மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு, இஸ்லாமிக் ஜிகாத் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், போர் என்பதே கொடூரமானது, இனியும் இதை கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வர் பதிவில், போர் என்பதே கொடூரமானது. அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான்.

இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும்.! ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு.!

கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த போரால் உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் – உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.

போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்