வக்ஃபு திருத்த மசோதா: தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.!
பட்டினப்பாக்கம் பேருந்து பணிமனை எதிரே போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அவரது அறிக்கையில், ஆட்சி அதிகாரம் இருந்தால், எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதி வரலாற்றில் உள்ளதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்துள்ளதாக பாஜக அரசையும் அவர் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று சென்னை பட்டினப்பாக்கம் பேருந்து பணிமனை முன்பு போராட்டம் நடத்த வந்த தவெகவினரை தடுத்து காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். பட்டினப்பாக்கம் பேருந்து பணிமனை எதிரே போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் அனுமதி மறுப்பு அளிக்கப்படவில்லை என்றும், போராட்டம் நடத்த மாற்று இடம் தருவதாகக் கூறியும் தவெகவினர் ஏற்க மறுக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் மூலம், மதம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான விவகாரங்களிலும் தவெக தலையிட முனைகிறது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் மக்களின் உரிமைக்காக ஆர்ப்பாட்டம் நடத்த முயலும் தவெகவிற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.