சென்னை கோயம்பேட்டில் தீவிரவாதி கைது.!
சென்னை: மேற்கு வங்க மாநிலத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி உபா (UAPA ACT) சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்த அனோவர் எனும் தீவிரவாதியை இன்று சென்னை கோயம்பேட்டில் மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.
அனோவர், ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், இந்த இயக்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுக்கு ஆதரவாக செயல்படும் தீவிரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அனோவர், இந்திய நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடந்த 9 மதங்களான தேடி வந்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹிபிபுல்லா என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனோவர், சென்னை கோயம்பேடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்புகளுக்கு அருகே கட்டுமான பணிகளில் ஈடுபட்ட வந்தததாக கூறப்படுகிறது. செல்போன் சிக்கனல்களை வைத்து அனோவர் இருப்பிடத்தை கண்டறிந்த மேற்கு வங்க போலீசார் இன்று காலை சென்னை கோயம்பேடு போலீசார் உதவியுடன் அனோவரை கைது செய்துள்ளது.