“ Walking with the Comrades” புத்தகம் நீக்கம் ! அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் -சு.வெங்கடேசன் ட்வீட்

Default Image

“ Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது  என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் “ Walking with the Comrades” புத்தகம்  நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, எம்.ஏ இலக்கிய படத்தில் இடம் பெற்றிருந்த அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம் நீக்கப்பட்டது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து மதுரை தொகுதி எம்.பி. சு .வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஆர்கனைசர் இதழில் (10/11/2020) ABVP யின் கோரிக்கை வெளியிடப்பட்டதை ஒட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் “ Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது.பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு, கல்விக்கான நிலைக்குழு , ஆட்சிக்குழு ஆகிய மூன்று கூட்டங்களிலும் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகு தான் எந்த ஒரு பாடத்திட்டத்தையும் சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும் . எனவே இந்த அறிவிப்பு உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand
Tungsten madurai
mk stalin
annamalai