விரைவில் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Anitha Radhakrishnan

மீனவர்களுக்கான தடைகால நிவாரண உதவித்தொகை முதலமைச்சர் அறிவுரைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தகவல்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி விரைவில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், மீனவர்களுக்கான தடைகால நிவாரண உதவித்தொகை முதலமைச்சர் அறிவுரைப்படி உயர்த்தி வழங்கப்படும். இதுதொடர்பாக முதலமைச்சர் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பார். மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசை முதல்வர் வலியுறுத்துவார் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, பேசிய அமைச்சர், பசுந்தீவன உற்பத்தியை அதிகரித்து பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். மேலும், ஆவினில் ஒட்டுமொத்தமாக பால் உற்பத்தி குறையவில்லை. சில தனியார் பால் பண்ணையாளர்கள் விலை அதிகம் கொடுத்து பாலை வாங்கி வருகிறார்கள். ஆவின் நிறுவனத்தில் ஒரு தட்டுப்பாடும் இல்லை. தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்வதில் ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்