அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை…!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் எஸ்.பி்.வேலுமணியுடன் இணைந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.அதன் பின்னர் அவர் கூறுகையில், காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி, சுகாதாரதுறை இயக்குனர் எட்வின்ஜோவிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.