என்னை வசைபாடியவர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டப்போகிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் அமைச்சர் வீஜயாபாஸ்கர் மற்றும் அதிமுக அரசு மீது குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். நான் சட்டமன்றத்தில் அமைச்சர்.அதேபோல் நான் மருத்துவமனையில் டாக்டர்.ஆனால், இங்கே கூறியிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த மேடையில் நான் அரசியல் பேசவில்லை.
ஆனாலும், அடுத்த வாரம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை கூட்டி போட்டி மேடை அமைக்க உள்ளேன். அந்த மேடையில் என்னை வசை பாடிய அனைவருக்கும் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். .
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…