கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20%, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும், 20% ஊதிய உயர்வு பணியாளர் கூட்டுறவு கடன், சிக்கன நாணயச்சங்க ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.