எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது.
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா
தமிழகத்தில் மொத்த முதல் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என 40 தொகுதிகள் உட்பட மொத்தம் நாடு முழுவதும் 102 தொகுதிகளில் முதற்கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்து வருகின்றனர்.
வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் எந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்கு விழுவதாக அங்கு குற்றசாட்டு எழுந்தது.
வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 150ஆவது வாக்குசாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சிலர், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து, திமுக, அதிமுக அரசியல் கட்சி பிரமுகர்கள் அங்குள்ள தேர்தல் அதிகாரிகளிடம் குற்றசாட்டு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக புகார் கூறிய நபரை காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் அழைத்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர். உண்மையிலேயே அவ்வாறு நடந்ததா.? இல்லை அவர் பொய் புகார் கூறினாரா என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் இவ்வாறான குளறுபடிகள் நடக்காது என தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது குறிப்பிடதக்கது.