திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
விருத்தாச்சலம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட முக ஸ்டாலின் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுதாரர் ஒவ்வொருவராக பேச வைத்தார். அப்போது, தனது கோரிக்கைகள் முன்வைத்த சிறுமி ஒருவர், திமுக தலைவர் முக ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வரானதும் விருத்தாச்சலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் எங்கள் ஊரில் எல்லா வசதியும் இருக்கு, ஆனால் இன்னும் மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆகையால், முதல்வரானதும் மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று நம்புகிறேன் என தெரிவித்திருந்தார். மேலும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுருந்தார். இதற்கு பதிலளித்த முக ஸ்டாலின், இது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்று கூறி, நிச்சியமாக, உறுதியாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றும் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…