#BREAKING: சற்று நேரத்தில் பாஜகவில் இணைய உள்ள வி.பி.துரைசாமி.!

Default Image

இன்று காலை 10 மணி அளவில் சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜகவில் இணைக்கிறார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். பதவி நீக்கினார். இதனால்,  துணைப் பொதுச்செயலாளராக  அந்நியூர் செல்வராஜை மு.க.ஸ்டாலின் நியமித்தார். இதுகுறித்து வி.பி.துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, எனக்கு ஏற்கனவே தெரியும். தி.மு.க.வில்  எனக்கு  சிலர் எதிராக சதி செய்துள்ளனர் என கூறினார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜகவில் இணைக்கிறார். இதுகுறித்து வி.பி.துரைசாமி கூறுகையில், திமுகவின் அடிமட்ட தொண்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்.  பாஜகவின் கொள்கைகளை ஏற்றே அதில் இணைகிறேன். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்து கட்சியில் இணைகிறேன் என அவர் தெரிவித்தார்.

சமீபத்தில், தமிழக பா.ஜ., தலைவராக முருகன் நியமிக்கப்பட்டார். அவரை வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால், பா.ஜ.,வில் துரைசாமி சேரப்போவதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்