ஜூலை 4ம் தேதி முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை -தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
ஜூலை 4ம் தேதி முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்படவுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயற்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கான பணி இன்று தொடங்கியுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பயிற்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மிக விரைவில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாடாளுமன்ற தேர்தலுக்காக வேறு மாநிலத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளது; ஜூலை 4ம் தேதி முதல் மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்படவுள்ளது தெரிவித்துள்ளார்.