வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட வேண்டும்-தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பக்கம் யாரும் செல்லாத வகையில் தடுப்பு போட வேண்டும்.
முக்கிய பிரமுகர் யாராவது வர நேர்ந்தால் பதிவு புத்தகத்தில் அவர்களின் கையெழுத்தை பெற வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட வேண்டும்.வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடையில்லா மின்சாரம், ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.