தமிழகத்தில் புதிதாக மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.முதல் கட்டமாக 27 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதில் கட்சி அடிப்படை இல்லாமல் ஊராட்சி மன்ற உறுப்பினர் ,ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி கடந்த 16 -ஆம் தேதி நிறைவடைந்தது.மொத்தமாக 3,00,2994 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதில் 3643 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.48,891 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.பின்னர் வெளியிடப்பட்ட இறுதிவேட்பாளர் பட்டியலில் 18,570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டனர்.2,31,890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும் பகுதிகளில் 60,000-க்கும் மேற்பட்ட போலீசார்,முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்வும் ,இணையதள கண்காணிப்பு மூலம் கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…