தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு.! பதற்றமான வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு.!
தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தல் இன்று நடைபெறுவதால், அத்தொகுதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 வரை நடைபெறவுள்ளது.
இதில் அனைவரும் பங்கேற்க அத்தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்குக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேறு பகுதிகளில் பணி புரியும், அத்தொகுதி வாக்காளர்களுக்கும் இது பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது.
திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக VS நாதக இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி ஆண் வாக்காளர்கள் 1,10,128 , பெண் வாக்காளர்கள் 1,17,381 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர். 53 இடங்களில் 237 வாக்குசாவடிகள் அமைப்புக்கப்பட்டுள்ளது. அதில், 9 வாக்குசாவடிகள் பதட்டமானவை என கண்டறியட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பபடி, 300 துணை ராணுவ வீரர்கள், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.