“வெள்ளிக் கொலுசு,ஹாட் பாக்ஸ்,அண்டா என விலைப்பேசப்பட்ட வாக்காளர்கள்” – கமல்ஹாசன் பெருமிதம்!

Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு,வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப் புடவை, ரூ.2000 முதல் ரூ.8000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் நேர்மைக்கு வாக்களித்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19  நடைபெற்றது.இதில் 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம்,பண பலம்,கூட்டணி பலம்,ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும்,வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப் புடவை, ரூ.2000 முதல் ரூ.8000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மைக்கு வாக்களித்த வாக்காளர்களின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியது.அவர்களுக்கு தன் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,அவர் தனது அறிக்கையில் கூறுகையில்:

‘மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்’ என்பது ஒரு சம்பிரதாயமான வார்த்தை.அதை நான் சொல்ல விரும்பவில்லை.மக்களும் பல சமயங்களில் கூட்டாகச் சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள். வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு. எங்களைப் போன்ற நேர்மையாளர்களை,அரசியலை பணம் குவிக்கும் தொழில்வாய்ப்பாகக் கருதாதவர்களை,வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க நினைப்பவர்களைத் தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.

என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்