வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைக்க வேண்டும் மற்றும் வாக்காளர்களை ஒருங்கிணைக்க வேண்டுகோள் விடுத்தார் வருவாய் துறை ஆய்வாளர் வீரப்பன் !!!
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைக்க வேண்டும் மற்றும் வாக்காளர்களை ஒருங்கிணைக்க வேண்டுகோள் விடுத்தார் வருவாய் துறை ஆய்வாளர் வீரப்பன்.
மேலும் இது குறித்தும் அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான பயிற்சி ஒன்றை கடந்த வெள்ளிகிழமை துவக்கி வைத்தார்.
மேலும் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை உறுப்பினர்களாக சேர்த்து வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்த மையத்தின் மூலம் வாக்காளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறினார்.